வெளிநாட்டு பெண்களின் பிகினி உடைகளால் சீரழிக்கப்படுமா உல்லே முஸ்லிம் வாழ்வியல்


அறுகம்பை - உல்லே பொத்துவில் போன்ற  பிராந்தியங்களில் அதிக வெளிநாட்டு பெண்கள் பிகினி ஆடைகளுடன் சுற்றிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர் அந்த சமயங்களில் சின்னஞசிறு வயதினர் வீதியால் ஹபாயா போட்டுக்கொண்டு மத்ரசாக்களுக்கு போவதையும் பார்த்திருப்பீர்கள், இன்னும் சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர் முத்தமிட்டுக் கொண்டிருக்கையில் நமது முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கடந்து செல்வதையும் கண்டிருப்பீர்கள் இதுவெல்லாம் மனங்களை பாழாக்கும் செயல்களாகும்,

இதைவிடுத்து அறுகம்பே கடற்கரையில் பிகினி ஆடைகளுடன் வெள்ளைக்கார பெண்கள் குளிக்கையில் நமது முஸ்லிம் ஆண்களும், பெண்களும் குளிப்பதையும் கண்டிருப்பீர்கள் இவைகள்தான் நமது வாழ்வியலை சீரழிக்கும் செயற்பாடுகள், ஒரு பக்கம் சிறிய வயதினரின் மனோநிலை பாதிக்கப்படுகிறது இன்னுமொருபுறம் இளைஞர் யுவதிகளின் வாழ்வியில் பாதிக்கப்படுகிறது.

இவைகள் தவிர்க்க முடியாது என்றாலும் பொத்துவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் இவைகளை உள்ளுராட்சி மன்றங்கங்கள் அப்பகுதி முஸ்லிம் அமைப்புகள் தடுப்பதற்கு முயற்சிக்க முடியும், சுற்றுலாத்துறையை தடுக்க முடியாது நமது சகோதரர்களை தடுக்க முடியும் இதற்கான விசேட திட்டங்களை தடுக்க முடியும்,  டான்ஸ்சும் குடியும் மாதுவும் பழகிவிடக்கூடாது நமது ஆண்கள் என்பதற்கான பதிவே இது.

ஷேக் மிசாரி