உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு: மாணவர் மூவருக்கும் பிணை

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பேர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல்நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் உட்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது