கொழும்பு நாரஹேன்பிட நடுவீதியில் கிரிக்கெட் விளையாடிய கோஹ்லிஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் திறமை குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோஹ்லியின் செயற்பாடு குறித்து இலங்கை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகிலுள்ள வீதியில் கோஹ்லி கிரிக்கெட் விளையாடிய விதம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த வீதியில் உள்ள சிறுவர்களுடன் இணைத்து விராட் கோஹ்லி கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பிரபலமாகியுள்ளன.
இலங்கைக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி திறமைகளை வெளிப்படுத்தியதுடன், பல சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.