அக்கரைப்பற்று மேயர் பதவிக்கு அஸ்மி, பஹீஜ்,சபீஸ்; யாருக்கு அதிஷ்டம் !



கரையூர் செய்யித்

அக்கரைப்பற்று மாநகர சபையின் அடுத்த மேயர் யார் என்பது எல்லோர்க்கும் தெரியும், இந்த மாநகர சபையை தேசிய காங்கிரஸ்தான் கைப்பற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றாலும் கட்சியில் இருக்கும் யாருக்கு கட்சியின் தலைவர் மேயர் ஆவதற்கு சந்தர்ப்பம் வழங்குவார் என்பதில் சந்தேகமுள்ளது.

கட்சியை பேஸ்புக்கிலும், இதர மேடைகளிலும் உரத்துக்கொண்டு செல்லும் அஸ்மி, கொள்கை பரப்பு செயலாளர் பஹீஜ், அதிக பணத்தை வாரி இறைப்பதாக சொல்லும் சபீஸ், முன்னாள் அதிபர் அன்சார் ஆகியோர் தலைவரின் எண்ணத்தில் இருப்பதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவர்களில் யாரையும் தலைவர் தெரிவு செய்யாவிடின் இந்த விக்கட்டுகள் வேறு கட்சிகளால் வீழ்த்தப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். இதை தவிர்த்து மீண்டும் முன்னாள் மேயர் சக்கியை கட்சி மேயராக்குமா என்பதிலும் ஒரு சந்தேகம் உள்ளது.