லஞ்சம் பெற்ற கலால் திணைக்கள அதிகாரி கைது


அளுத்கமையில், போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி ஒருவரிடமிருந்து லஞ்சமாக ஒரு தொகைப் பணத்தைப் பெற்ற கலால் திணைக்கள அதிகாரியொருவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முப்பதாயிரம் ரூபாவை இவர் இலஞ்சமாகப் பெற்றார் எனக் குற்றம்சாட்டப்படுகின்றது.
அம்பலாங்கொடையைச் சேர்ந்த இந்த அதிகாரி, ஏற்கனவே அதே நபரிடமிருந்து இருபதாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றிருந்தார் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.