மியன்மார் இனப்படுகொலை – கிழக்கு மாகாணசபை கண்டனம்


மியன்மாரில், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான சிறப்புக் கண்டனத் தீர்மானம் கிழக்கு மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
மாகாண சபை அமர்வு காலை 10.00 மணிக்குத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலமையில் கூடியபோது இதற்கான சிறப்புப் பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்பித்தார்.
மியன்மார் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனைத் தடுக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களுக்கு இத்தீர்மானத்தை இலங்கை அரசு அனுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.