அதாஉல்லாவின் தோல்விக்கு உதுமாலெவ்வையே காரணம்; துல்சான் காட்டம்


முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் படுதோல்விக்கும் வாக்கு வங்கி சரிவிற்கும் பிரமுகர்கள் அகல்விற்கும் முக்கிய காரணம் உதுமாலெவ்வைதான் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்சான் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் குறித்து எமது செய்திப்பிரிவிற்கு கருத்துரைத்த அவர்,

தேசிய காங்கிரஸ் எனும் பாரிய கட்சியை அக்கரைப்பற்றிற்குள் அடக்கிய கல்நெஞ்சுக்காரர் உதுமாலெவ்வைதான் பிரமுகர்கள் அதாஉல்லாவை விட்டுச் செல்வதற்கும் காரணம், அவர் நினைத்திருந்தால் அட்டாளைச்சேனையில் வாக்கு வங்கியை அதிகரிப்பு செய்திருக்கலாம் அப்படி செய்யவில்லை.

முக்கியமாக நான் பிரிவதற்கு காரணம் உதுமாலெவ்வைதான், அதனை வெளிப்படையாக மேடைகளில் பேசுவதற்கு காரணம் வரும், மாகாண அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கட்சியை அதிகப்படியாக வளர்த்திருக்க முடியும் ஆனால் அவர் செய்யவில்லை மக்களை அதாஉல்லாவிடம் இருந்து பிரித்தார்.

பிரமுகர்களை பிரித்தார், தானே அதாஉல்லாவின் எல்லாம் என நினைத்தார் படுதோல்வியடைந்தார். அடுத்த மாகாண சபைதேர்தல் அவருக்கு நல்ல பாடமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்