அனுஷ மற்றும் லலித் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுமதி


அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் தற்போது சுகவீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் காணப்படும் நீரிழிவு நோய் அதிகரித்த காரணத்தினால் இன்று (08) முற்பகல் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடளாவிய ரீதியாக விகாரைகளுக்கு சில் ஆடைகள் பகிர்ந்தளித்தமை தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு நேற்று (07) 3 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (நு)