முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர் சடலமாக மீட்பு


அருகம்பையில் விடுமுறையைக் கழிக்க வந்து முதலைக்கு இறையாகிய பிரித்தானியாவை சேர்ந்த இளம் ஊடகவியலாளரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மேற்கொண்ட தேடுதலில் பின்னர் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் அறுகம்பே பகுதிக்குச் சென்றிருந்த குறித்த நபர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்ற வேளையே அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 24 வயது நிரம்பிய மெக்லின் எனப்படும் பிரித்தானிய ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.