மண்சரிவு அபாயம் ஏஹலியகொட பிரதேசத்தில்


மழையுடன கூடிய கால நிலையையடுத்து ஏஹலியகொட பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்த வலயத்தில் உள்ள மக்களை உடனடியாக அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 இரத்தினபுரி மாவட்டத்தில் ஏஹலியகொட பிரதேத்தில் 150 மில்லி மீட்டர் மழை பெய்யகூடும் இடர் முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை குகுலே கங்க நீர்த் தேக்கதின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.அதனால் அகலவத்த, வலல்லாவிற்ற, பாலிந்த நுவர, இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் பதுரெலிய பிரதேச தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 கடும் மழையின் காரணமாக நதிகளில் நீh மட்டம அதிகரித்து வருகிறது. இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.  

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கொழும்பு அவிசாவளை வீதியில் புவக்பிட்டிய பகுதி வெள்ள அனர்த்தத்தை எதிர் நோக்கியுள்ளது.

 வத்தளை நகரை சுற்றிவுள்ள பல பிரதேசங்கள் மற்றும் கொலன்னாவ நாகஹமுல்ல பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது