பாடசாலை மாணவியை கர்ப்பிணியாக்கிய நபரொருவர் கைது


15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபரொருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 52 வயதான அந்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் என பொலன்னறுவை காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பொலன்னறுவை - போகஹபார பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவியான இவர், நோய் நிலை காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எனினும் இது தொடர்பில் அந்த சிறுமி தனது தாயிற்கு தெரியப்படுத்தவில்லை என அறியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.