வெள்ளம் காரணமாக அரச பாடசாலைகள் மூடப்படுகிறது; அதிகம் பகிருங்கள்சிலோன் முஸ்லிம்  செய்தியாளர் எம். எம். எம். நுஸ்ஸாக்

இரத்தினபுரியில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி  மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை மூடப்படும் என்று சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ் .வீரசூரிய தெரிவித்தார். 

மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, அயகம, எலபாத்த, குருவிட்ட, எஹலியகொடை ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி விடுமுறை வழங்கப்பட்டுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பிரிதொரு தினத்தில் பாடசாலை நடாத்தப்படும் என்று சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ் .வீரசூரிய தெரிவித்தார்.