மறைந்த அலவ்வே ஞானவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த ஹதமுண கங்காராம விகாராதிபதி பொலன்னறுவை பிராந்திய பிரதம சங்க நாயக்கர் அதி வணக்கத்துக்குரிய அலவ்வே ஞானவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஹதமுண கங்காராம விகாரையில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடலுக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், விகாரையின் தேரர்களிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.