நான்கு பேருக்கு மரண தண்டனை: கேகாலை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!கேகாலையில், 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுள் ஒருவர் விசாரணைக் காலத்தின்போதே மரணமானார். மற்றொருவர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டார்.
மீதமிருந்த நான்கு பேர் மீதும் பதியப்பட்டிருந்த வழக்கு விசாரணையில், குறிப்பிட்ட நான்கு பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து, வழக்கை விசாரித்து வந்த கேகாலை நீதிமன்றம் நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தப்பியோடியவரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.