Sep 10, 2017

ஒரு பார்வையில் இரு விடயம் மாட்டப்போவாது மூன்று முத்துக்கள்


ஜெமீல் அகமட்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  சார்பாக தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்ட  ஹசன் அலி நிசாம் காரியப்பர் மற்றும் வன்னி குருநாகல் மாவட்டத்தில் யானை சின்னத்தில்  போட்டியிட்டவர்கள் இவர்களை தவிர வேறு யாரையும் நியமிக்க முடியாத நிலையில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுக்க முடியாத சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது 

அதனால் சல்மானிடம் உள்ளதை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என நினைத்தால் சல்மானுக்கு ஆதரவாக அட்டாளைச்சேனையில் அறிக்கைகள் வெளிவருகின்றது அதில் முதல் BA முந்திக் கொள்கின்றார் இதனால் மக்களுக்கு யார் என்று தெரியாத சல்மானை தொடர்ந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதில் அட்டாளைச்சேனை மக்களுக்கு எந்த வித பிரச்சினை இல்லை என்பபதை ஹக்கிம் அறிந்து விட்டார் அதை   கடந்த மாதம் அட்டாளைச்சேனையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆப்தீன் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தேவையில்லை என்று பேசினார் இப்படி தலைவருக்கு சார்பானவர்கள்  இருப்பதை  நாடி பிடித்து அறிந்து  நிம்மதியாக இருக்கும் போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் என்பது கிடைக்காது கிடைக்க சட்டமும் விடாது 

இந்த நிலையில் சல்மானிடம் உள்ள தேசியப்பட்டியலை பறிக்க வேண்டும் என பலர் குரல் கொடுத்து வருகின்ற போது  ஹசன் அலியும் கட்சியை தூய்மைபடுத்த வெளியேறிவிட்டார் வன்னி குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர் அதனால் நிசாம் காரியப்பருக்கு மட்டும் தான் கொடுக்க முடியும் கொடுத்தே ஆக வேண்டும் இப்படியான நிலையில் தனது ஆலோசகராக இருக்கும் சல்மானை தொடர்ந்து தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக வைத்துக்கொள்ள ஹக்கிம் போட்ட நாடகம் தான் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் என்பதாகும் 

கட்சியின் புதிய யாப்பு கூறுகிறது செயலாளர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றால் நிசாம் காரியப்பர் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது அதனால் தேசியப்பட்டியல் என்ற கனவிலிருந்து நிசாம் காரியப்பர் எழுந்து ஹக்கிமின் சதி வலையில் மாட்டிக்கொண்டார் அதனால் சல்மான் தொடர்ந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராவே இருப்பார் 

ஆனால் சல்மானின் தேசியப்பட்டியலை தான் பெற்றுக்கொள்ளலாம் என பலர் ஆவலுடன் நினைத்து  கனவில் மிதக்கின்றனர் அதில் பணத்தை கொடுத்து பதவியை பெறுபவர்களில்  முக்கியமானவராக நசீர் அகமட் அவர்களின் பெயர் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது அதற்கு சட்டம் இடம் கொடுக்காது சட்டத்தை மீறி ஹக்கிம் நினைத்தவருக்கு தேசியப்பட்டியல் வழங்க தேர்தல் ஆனைக்குவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் சம்மதிக்கமாட்டார் என்ற நிலை அறிந்து தான் நிசாம் காரியப்பருக்கு குழி வெட்டப்பட்டுள்ளது மற்றவர்கள் இழவு காத்த கிளி போல் மரத்தை விட்டு பறந்து மயில் மேல் ஏறும் காலம் உருவாகிறது என்பது ஹக்கிமுக்கு இப்போது புரிந்து விட்டது 

இந்த செயலாளர் நியமனம் பற்றி பஷீர் சேகுதாவூத் மறைமுக ஒரு  உண்மையை சொல்லியுள்ளார் அது தான் டிபன்ஸ் வைத்து அஸ்ரப் அவர்கள் கட்சிக்கு சேர்த்த சொத்துகளுக்கு ஆப்பு வைத்த கொள்ளை கோஸ்டிகள்  இப்போது நீதிமன்றத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கின்றனர் அதில் கொள்ளை கோஸ்டியின் தலைவனாக நிசாம் காரியப்பர் இருக்கின்றார் அதனால் அவரை கட்சியின் சொத்துக்களை பங்கீடு செய்தவர்கள் டிபக்ஸ் குற்றத்திலிருந்து விடுதலை பெற இந்த செயலாளர் பதவியை பாவித்து காப்பாற்றலாம் என நிசாம் காரியப்பருக்கு ஆலோசனை கூறி அவரின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் கட்சியின் சொத்தை அபகரித்த வழக்கில் எவரும் தப்ப முடியாது அதனால் விரைவில் டிபக்ஸ் கூட்டம் கூண்டுக்குள் போவது உறுதி அது இறைவனின் தீர்ப்பு 



SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network