பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டம்

 

(க.கிஷாந்தன்)

நாடளாவிய ரீதியாக 04.09.2017 ன்று பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர சபையில் பணிபுரிந்த சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் ஐந்து பேரை சுகாதாரத்துறை செயலாளரினால் தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் முறையான தீர்வு வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் 04.09.2017 ன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால் அன்றாட கடமைகள் செயழிழந்து காணப்பட்டன. நுவரெலியா, அட்டன், லிந்துலை, கொட்டகலை, டயகம, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற இடங்களிலும இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.