மாடியில் வேலைசெய்யும் மேசன்மார்கள் குறித்து கீழ்வீட்டுப்பெண்கள் அவதானம்!கரையோர மாவட்டங்களில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் அடுக்குமாடிக்கட்டடம் கட்டும் மேசன்மார்கள், அதாவது அந்நிய ஆண்கள் வசதிகுறைந்த அல்லது சிறிய வீடுகளில் கீழே வசிக்கும் பெண்களை பார்த்த்து சில்மிசம் செய்யும் முறைப்பாடுகள் அண்மையில் காத்தான்குடியில் பதிவாகியிருந்தது.

பணிவாக உள்ள வீடுகளில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகள் தானே என்று சகஜமாக உடைகள் குறித்து அவதானம் எடுக்காமல் பணி செய்வர், அல்லது சிலரது குளியல் பகுதியும் வெளியில்தான் இவை வசதி குறைவாக இருப்பதால் அவர்கள் செய்கிறார்கள். பக்கத்தில் மாடிகட்டுவதற்கு அழைத்து வரப்படும் மேசன்மார்கள் கீழே உள்ள பெண்களை பார்ப்பதும் சில்மிசம் செய்வதும் இன்று அதிகரித்துள்ளது.

இது குறித்து பெண்கள் அவதானமாக இருப்பதோடு தவறுகள் குறித்து போலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்