கிழக்கிலுள்ள விகாரைகளை யுத்த காலத்தில் முஸ்லிம்களே காத்தனர்; சந்தானந்த தேரர்கிழக்கு மாகாணத்திலிலுள்ள அதிக விகாரைகள் புலிகளால் தாக்கப்படாமல் இருப்பதற்கு முஸ்லிம்களே காரணம் என சந்தானந்த தேரர் தெரிவித்துள்ளார், கண்டிய மன்னன் முதல் இன்றுவரை முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சிங்களவர்கள் அதே போல அவர்களும் விசுவாசமுள்ளவர்களாகவே இருந்தனர் இன்று ஒருசில அரசியல் கட்சிகளின் குழப்பங்களும் இனவாத குழுக்களின் வேண்டாத வேலைகளுமே பிரிவினை ஏற்பட காரணம் எனக்குறிப்பிட்டார்

அக்கரைப்பற்றில் உள்ள பாரிய விகாரையை அந்தப்பகுதி அரசியல் அமைச்சர் ஒருவர் பாதுகாத்தார் அது எனக்கு நன்றா தெரியும், அவர்கள் எங்களின் சகோதரர்கள், நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் இதுவே எங்கள் நோக்காகும் இலங்கையை ஒற்றுமையின் மூலமே கட்டியெழுப்ப முடியும்.