புதிய அரசாங்கத்தை அமைப்போம் - சம்பிக்க ரணவக்கஇந்த அரசாங்கம் சரியில்லை என்றால் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். சிங்கள நாழிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாட்டுப்பற்று இல்லை. அவர் தேர்தலை வெல்ல விடுதலை புலிகளுக்கு பணம் கொடுத்தார்.

ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை  மாற்றிவிட்டார் நாமும் எமது கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளோம். தீவிரவாதம் தொடர்பில் சந்திரிக்கா ரனில் ஆகியோரின் கொள்கைகள் பிழையானது.ஆனால் அது இறந்தகாலம் நாம் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் பிழை இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும். பின்னோக்கி செல்லமுடியாது.