Header Ads

ad728
  • Breaking News

    ஐ.நா. செயலாளர் ஜனாதிபதிக்கு விடுத்த வேண்டுகோள்


    புதிய அரசியலமைப்பினால் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட  வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (23) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
    நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான உதவிகளை உலக நாடுகளிடம் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
    மேலும், இலங்கையில் நிரந்தர சமாதானம், அபிவிருத்தி என்பனவற்றை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக ஐ.நா. பொதுச் செயலாளரை இலங்கைக்கு வருமாறும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728