மஸ்தான் எம்பியின் கருத்தால் அதிர்ந்துபோன அரச அதிகாரிகள்; சாட்டையடியா?யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வடுக்களை சுமந்து வாழும் வட புல மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் அரச அதிகாரிகளை நாடும்போது அரச அதிகாரிகள் அதற்கான உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். மக்கள் தமது தேவைநாடி அரச அதிகாரிகளிடம் செல்லும்போது அவர்களின் தேவைகளை இயன்ற அளவு பூரணமாகவும் மன நிறைவுடனும் நிறைவேற்றப்படவேண்டும். 

இவ்வாறு நடைபெறாமல் அரச அதிகாரிகள் அசமந்தபோக்கை கடைப்பிடிக்கும்போது பொது மக்களாகிய அவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எங்களை நாடுகின்றனர். ஏன் இவ்வாறு நடைபெறவேண்டும். மக்களுக்கு சேவை செய்வதும் மக்கள் தேவைகளை உடன் செயற்படுத்துவதுமே எமது பணியாக இருக்க வேண்டும். அதுவே எமது பதவிக்கும் தொழிலுக்கும் உயரிய அந்தஸ்தை வழங்கும்.

தேவை நாடிவரும் மக்களுக்கு இன மத மொழி பிரதேசம் கடந்து நாங்கள் சேவையாற்ற வேண்டும் தேவை நாடிவரும் மக்களை மன நிறைவுடனேயே அனுப்ப வேண்டும் இதுவே எமது தொழில் தருமத்தின் உயரிய நோக்காகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் இனி அரச அதிகாரிகள் பற்றி பொது மக்கள் தெரிவிக்கும் அதிருப்திகர கருத்துக்களை தான் ஒருபோதும் விரும்பவில்லையெனவும் மேலும் மக்கள் நியாயமான முறையில் அரச அதிகாரிகளை அனுகுமாறும் கேட்டுக்கொண்டார்.