ஹம்பாந்தோட்டை தங்காலை பிரதான வீதியில் கோர விபத்து! இருவர் பலிஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதியின் நொட்டோல்பிட்டிய, மாரகொல்லிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (13)  மதியம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த பேருந்து மற்றுமொரு வண்டியை முந்திச் செல்ல முயற்சித்த போது எதிரில் வந்த முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இறந்தவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.