இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது


டுபாயில் இருந்து 7.8 கிலோ கிராம் தங்க நகைகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இரு பெண்களை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபாவெனத் தெரிவித்தனர்.
குறித்த இரு பெண்களும் தங்க நகைகளை இடுப்புப்பட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்துக்கொண்டுவரும் போது சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் தங்க நகைகளுடன் குறித்த இருவரையும் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இரு பெண்களிடமும் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.