அமைச்சர் ரிசாதின் சினிமா தொலைக்காட்சியை முஸ்லிம் ஊடகமாக மாற்ற அறிவுரை


அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள உதயம் ரி.வியை முஸ்லிம்களின் தனித்துவ தகவல் ஊடககமாக மாற்றுமாறு தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசிய இயக்கம் அறிவுரை வழங்கியுள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறித்த ஊடக அறிக்கை இன்று வெளியாகியது,

குறித்த அறிக்கையில் முஸ்லிம்களுக்கென சொந்தமான ஒரு ஊடகம் இருப்பது மிகவும் சந்தோசமான விடயம் ஆனால் அது சினிமா கூடமாக இருப்பது கவலைக்குரியது மலேசியா இந்திய லண்டனில் இருப்பது போல இலங்கையிலும் இதனை முஸ்லிம் ஊடகமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.