ஆப்கானிஸ்தானில் சனத் ஜயசூரிய இருந்த விளையாட்டரங்கு அருகில் குண்டு வெடிப்பு இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ளவிளையாட்டரங்கொன்றின் சோதனைச் சாவடியில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற வேளையில் குறித்த விளையாட்டரங்கில் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று நடைபெற்று வந்துள்ளதுடன் அப்போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய,பர்வேஸ் மஹ்ரூப், அஷான் ப்ரியஞ்சன் மற்றும் போட்டி நடுவர் கிரகாம் லாப்ரோய் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த குண்டு வெடிப்பு இடம்பெற்ற வேளையில் அவர்கள் விளையாட்டரங்கை விட்டு சற்று தூரத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளையாட்டுத்தொடரை நிறைவு செய்து சனத் ஜயசூரிய மற்றும் பர்வேஸ் மஹ்ரூப் ஆகியோர் இன்று அதிகாலை நாட்டுக்கு திரும்பியுள்ள வேளையில் அஷான் ப்ரியஞ்சன் மற்றும் கிரகாம் லாப்ரோய் ஆகியோர் தொடர்ந்தும் தொடரில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வீரர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது