இனக்கலவரத்தை துாண்ட முயற்சி; ஞானயும் டானும் மஹி்ந்தவின் ஆட்களே!


நாட்டில் ஆட்சி மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும் என்று எத்தனித்து கொண்டிருக்கும் ஒரு குழு இனக்கலவரத்தை துாண்டியாவது மாற்றத்தை உண்டுபண்ணலாம் என எண்ணியுள்ளாக தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் அறிவித்துள்ளது.

அதற்கு பலிக்கடா முஸ்லிம் சமூகம்தான் கடந்த அரசில் முஸ்லிம்களே ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதை அறிந்த முன்னைய ரெஜிமண்டு மீண்டும் முஸ்லிம்கள் ரணில் - மைத்திரி அரசையும் எதிரக்க் வேண்டும் அதற்கான சூழ்ச்சிகளை செய்து வருகின்றார், அவருடைய ஊடகப்பிரிவு அதற்காக பிரத்தியேகமாக இயங்குகிறது, கலவரம் அடிபாடுகள் நடைபெற்று அடுத்த நிமிடம் ஊடக அறிக்கைகைள் அனுப்ப படுகிறது, இவையெல்லாம் திட்டமிடப்பட்ட சதி, 

தமிழ் மக்கள் மீண்டும் மஹிந்தவை ஏற்க மாட்டார்கள் என்பது தெரியும், அதற்காக முஸ்லிம்களை தன்வசப்படுத்தினால் வெற்றி பெறலாம் என எண்ணியுள்ளார்.  . முஸ்லிம் அமைப்புக்களையும் சந்திக்கிறார்  முன்னாள் அதிபர் மஹிந்த, 

ஓரே ஒரு குறிக்கோள் இந்த அரசை முஸ்லிம்கள் வெறுக்க வேண்டும் மீண்டும் மஹிந்தான் என்பதை முஸ்லிம்களே சொல்ல வேண்டும். அதற்காக ஆடுபவர்களில் ஒருவர்தான் டான் பிரசாட்டு, அவரின் அகோர செயல் நேற்றும் இடம்பெற்றுள்ளது. 

டான் பிரசாத் மஹி்ந்தவின் ஆதரவாளர், அவருக்காக அரசியல் செய்பவர் முஸ்லிம்கள் இது குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.