தேசிய காங்கிரசின் வங்குரோத்து அரசியலுக்கு அட்டாளைச்சேனை மக்கள் தீர்ப்பளிப்பர்சப்ரி முஹம்மட்

மஹிந்தவை புகழ்ந்து பள்ளி உடைக்கப்படவில்லை என்று சொல்லி முஸ்லிம்களின் உரிமைகளை ஏப்பம் விட்ட முன்னாள் அமைச்சரும் மாகாண உறுப்புருமையும் தேசிய காங்கிரசை மீளக்கட்டியெழுப்புவதாக கோசமிட்டு அலைந்து திரிகின்றனர் அடுத்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடத்தை அட்டாளைச்சேனை மக்கள் கற்பிப்பர் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் குறித்த கலந்துரையாடலின் போதே இதனை அவர் தெரிவித்தார்,

கடந்த ஆட்சியில் மஹிந்த இனவதிகளுடகன் கூட்டாக இருநு்தபோது மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இன்று உத்தமர்கள் போல மேடைகளில் பேசித்திரிகின்றனர், பெணகள் விடயத்தையும் அசிங்ககங்களையும் துாற்றுகின்றர் இவைகள் முஸ்லிம் என்ற நற்பண்பை இல்லாமல் செய்து விடும், அவர்கள் எவ்வளவுதான் கூப்பாடுகள் போட்டாலும் அட்டாளைச்சேனை மண் அவர்களை மன்னிக்காது பக்கச்சார்பான அபிவிருத்திகளை அவர்கள் அட்டாளைச்சேனைக்கு செய்தார்கள் நினைத்திருந்தால் அக்கரைப்பற்றைப்போல அதீத அபிவிருத்திகள் செய்திருக்கலாம் புறம் தள்ளிவிட்டு இன்று எங்கள் உடன் பிறப்புகள் என்று கூக்குரல் இடுகின்றனர்,

முஸ்லிம் காங்கிரசின் அபிவிருத்தியுகம் ஆரம்பித்து விட்டது பொறுத்திருந்து பாருங்கள் நரிகளை துரத்தும் காலம் விரைவில். என்றார்ஃ