டான் பிரியசாத் தப்பியோட்டம்! பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு


அ.அலி
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி தேடப்பட்டு வருவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
 நேற்றிரவு அவரது வீட்டை  பொலிசார் சுற்றி வளைத்தபோது குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 எனவே டான் பிரியசாத் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் 011 2695719/ 011 2572222 ஆகிய இலக்கங்கள் மூலம் பொலிசாருக்குத் தகவல்களை அறிவிக்கலாம்.
Powered by Blogger.