போராட்டம் நடாத்தியது மக்களல்ல; உதுமானின் உறவினர்கள் - அமைச்சர் நசீர்வடக்கும் கிழக்கும் இணையப்போவதாகவும் 20வது சரத்து சரியாகிவிட்டதாகவும் பொய்யான வதந்திகளை பரப்பி போராட்டங்களை நடாத்தும் மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெவ்வை நேற்று அட்டாளைச்சேனையில் அவரது குடும்ப உறவினர்களை அழைத்து பேராட்டம் எனும் பெயரில் எதையோ செய்ததாக குறிப்பிட்டார் மாகாண சுகாதார அமைச்சர் நசீர்,

மேலும் எமது இணையத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், மக்களை குழப்பும் சதிகார கும்பல்களை ஒருபோதும் நாம் விடப்போவதில்லை 20வது சரத்து என்றால் என்னவென்று தெரியாக சிறுபராயங்கள் எல்லாம்கூட்டிவந்து நடுவீடிதியில் கோசமெழுப்புவதும் வடக்கும் கிழக்கும் இணையப்போவதாக கத்துவதும் மிகவும் கவலைக்குரியது. குறித்த பேராட்டத்தில் பங்குபற்றிய 40 பேரில் 30பேர் உதுமானின் குடும்ப உறவினர் மாறாக மக்கள் அல்ல, அட்டாளைச்சேனை மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர் என குறிப்பிட்டார்.