ஐ.நா நியதி பிரகாரம் ரோஹிங்யா முஸ்லிம்களை நிரந்தரமாக தங்க வைக்க முடியாது

Sep 27, 20170 commentsரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை இலங்கையில் நிரந்தரமாக தங்க வைக்க முடியாது எனவும் அவர் சில மாதங்களுக்குள் அவர்கள் வந்த நாடு அல்ல வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த அகதிகள் தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை அவர்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
Share this article :