முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவுஎஸ்.அஷ்ரப்கான்

கல்முனை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு (இஜ்திமா) கல்முனை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 08.09.2017 வெள்ளிக் கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ள இந்த மாபெரும் இஜ்திமாவில் “சோதனைகளும் அதன்போது உறுதியாக இருத்தலும் என்ற தலைப்பில் அஷ்-ஷெய்க் என்.பி.எம்.அபூபக்கர் ஸித்தீக் மதனியும், இயற்கை அழிவுகள் மறுமையின் அடையாளங்கள் என்ற தலைப்பில் அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபியும், மனிதனின் கடைசி நேரம் என்ற தலைப்பில் அஷ்-ஷெய்க் கலாநிதி அம்ஜத் ராஸிக் மதனியும், இஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும் என்ற தலைப்பில் அஷ்-ஷெய்க் நியாஸ் ஸிராஜி ஆகியோரும் விசேட தலைப்புக்களில் மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளார்கள்“.

வெளியூர்களிலிருந்து இந்த இஜ்திமாவில் கலந்து கொள்ள வருகை தரும்  சகோதரர்கள் வியாழக்கிழமை (07) ஆம் திகதிக்கு முன் 0776539000, 0777679579, 0775236025, 0776964632 ஆகிய கைப்பேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பபடுகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...