மனம் திறந்தார் மஹிந்ததேசப்பிரியஅரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் கருத்து கணிப்பொன்று நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்று தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை போதும் என 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
ஆனால், 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி தேர்தலை நடத்தவேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார்.