முஸ்லிம் இளைஞர்கள் உள்நாட்டு உற்பத்திகளை மெருகூட்ட முன்வரவேண்டும் - காலிக்இலங்கை தேசத்தில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் உள்நாட்டு உற்பத்திகளை உருவாக்க முன்வருதல் வேண்டும் என காலிக் ஹோல்டிங்ஸ் தலைவர் அப்துல் காலிக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி Industrial வியாபாராத்தை மோலோங்க செய்யலாம். கரையோர மாவட்டங்களில் வாழும் இளைஞர்கள் இதற்கு பெரிதும் உதவி செய்ய முடியும். உதாரணமாக விவசாயம் - மீன்பிடி ஆகிய தொழில்களை நவீன மயப்படுத்தி வெளிநாட்டு சந்தைகளுக்கு அதிக கிராக்கியாக்க முடியும்.

சிறிய சிறிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்குதல், வியாபாரத்தை பெருக்குதல் போன்றவற்றையும் செய்ய முடியும்.

இதற்கான அனைத்து விதமான உதவி நடவடிக்கையும் ஹாலிக் ஹோல்டிங்ஸ் செய்யும் எனவும் குறிப்பிட்டார்.