அதாஉல்லாவிற்கு ஹெலி அனுப்பியது யார்? அப்படியென்ன அவசியம்? விபரம் உள்ளே!முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா அண்மையில் கொழும்பிற்கு ஹெலியில் போனது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தது, இது ஆக்கபூர்வமற்றதாக இருந்தாலும் இப்படியான சூழ்நிலையில் இதனை தெளிவு படுத்தவேண்டிய கடப்பாடு இணைய ஊடகங்களுக்கு இருக்கிறது.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டிற்கு முக்கிய கட்சித்தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால விசேட அழைப்பிதழ் விடுத்தார், நிகழ்வு நடைபெற்ற தினத்தில் கொழும்பை விட்டு வெளியே உள்ள பகுதிகளில் இருக்கும் தலைவர்களுக்கு விசேட ஹெலி வசதி செய்யப்பட்டு பின்னர் திரும்பிச் செல்வதற்கு சிறிய ரக விமானம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, இது ஜனாதிபதியின் நேரடி உத்தரவு என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்துள்ளது.