அக்கரைப்பற்று இளைஞனின் சாதனை; றோயல் ஆச்சி மசாலா விருது பெற்றது!கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் கிழக்கு மாகாண ஆளுணர் கெளரவ றோஹித்த போகல்லாகம தலைமையில் இடம்பெற்ற விவசாய உற்பத்தி போட்டியில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த உணவு உற்பத்திக்கான முதல் இடத்தை றோயல் ஆச்சி உணவு உற்பத்திகள் பெற்றுக்கொண்டது. இதற்கான சான்றிதழையும் பரிசில்களையும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கெளரவ கிருஷ்னப்பிள்ளை துரைராஜ சிங்கம் அவர்களிடம் இருந்து றோயல் ஆச்சியின் உரிமையாளர் அஹமட் அஜ்மல் பெற்றுக்கொண்ட போது எடுக்கப்பட்ட படம்