தமிழ் மக்கள் மீதிருந்த கோபம் முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது; ஜெயா


வ.ஐ.ச. ஜெய­பாலன் சர்­வ­தேச தமிழ் சமூ­கத்­தி­னரால் நன்கு மதிக்­கப்­ப­டு­பவர். கவிஞர், நாவ­லா­சி­ரியர், அர­சியல் செயற்­பாட்­டாளர், அர­சியல் ஆலோ­சகர் என்­றெல்லாம் அறி­யப்­பட்­டவர். அண்­மையில் சினிமா நட்­சத்­தி­ர­மா­கவும் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார். சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்­கையர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர், யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் சங்க கௌர­வ தலை­வ­ரா­கவும் விளங்­கி­யுள்ளார். இலங்­கையில் யுத்த சூழ்­நி­லையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிர­ஜா­வு­ரிமைப் பெற்று அங்கும் இந்­தி­யா­வி­லு­மாக வாழ்ந்து வரு­கிறார். சிங்­கள மக்கள் இவரை ஒரு தேசி­ய­வா­தி­யாகக் கருதி வரு­கின்­றனர். தமிழ் பகு­தி­களில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் சிங்­கள, முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக அன்று புலி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களைக் கண்­டித்து இவர் குரல் கொடுத்­த­மை­யாலே சிங்­கள மக்­களின் அபி­மா­னத்­திற்­கு­ரி­ய­வ­ராக விளங்­கு­கிறார். 

இவ­ருடன் ராவய வார இதழ் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது. 
கே: இலங்­கையில் இன்று நிலவும் அர­சியல் நிலை குறித்து உங்கள் அபிப்­பி­ராயம் என்ன?
சிங்­கள அர­சியல் தலை­மைகள் இது­வ­ரையும் தமிழ் மக்கள் மீது காட்டி வந்த எதிர்ப்­பினை ஓர­ள­வுக்கு மட்­டுப்­ப­டுத்திக் கொண்டு இப்­போது அதனை முஸ்­லிம்கள் மீது திசை­தி­ருப்பி வரு­வ­தா­கவே எனக்குத் தோன்­று­கி­றது. இது மிகவும் மோச­மா­ன­தொரு செயற்­பா­டாகும். மத்­தி­ய­தர சிங்­கள மக்­க­ளுடன் நாடி பிடித்துப் பார்க்­கையில், அவர்­க­ளுக்கு தமிழர் மீதி­ருந்த குரோதம் குறைந்து அது முஸ்­லிம்கள் மீது திசை­மா­றி­யி­ருப்­பது தெரி­ய­ வ­ரு­கி­றது. தம் அர­சியல் வங்­கியை வளர்த்து அர­சியல் நடத்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு எப்­போதும் இனப்­ப­கை­மை­யொன்று தேவைப்­ப­டு­கி­றது. பகைமை முஸ்­லிம்கள் மீது திருப்­பப்­பட்­டுள்­ளதால் தமி­ழர்கள் பழை­யன மறந்­தி­ருப்­பார்கள் என்று சிங்­க­ள­வர்கள் இப்­போது நினைக்­கக்­கூடும். அது தவறு. தமி­ழர்கள் சிங்­கள தலை­மை­க­ளுக்குக் கேட்கும் வண்­ணமாய் உரத்துக் கேட்குமளவு குரல் கொடுப்­ப­தில்லை. பகி­ரங்­க­மாகப் பேசிக் கொள்­ளாது தம் கவ­லை­களை அப்­ப­டியே அடக்­கி­வா­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 
கே: இதனை மேலும் விளக்க முடி­யுமா?
யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­வுடன் பெரும்­பா­லான சிங்­க­ள­வர்கள் அதற்கு தவ­றான அர்த்­தத்­தையே கொண்­டி­ருந்­தனர். யுத்தம் உரு­வானதற்­கான கார­ணத்தைப் போன்றே யுத்­தத்தின் பின்னர் தோன்­றி­யுள்ள நிலை­மைகள் குறித்தும் அவர்­க­ளுக்கு போதிய தெளி­வி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. தமிழ் மற்றும் வடக்கு, கிழக்கு பிரச்­சினை என்­பன தமிழ், முஸ்­லிம்­க­ளுக்­கி­டை­யி­லான கலா­சாரத் தனித்­துவ அடை­யா­ளங்கள் தொடர்­பா­ன­தொரு பிரச்­சி­னை­யாகும். கலா­சார தாயகம் தொடர்­பான பிரச்­சி­னை­யாகும். தமிழ்  பிர­தே­சங்­களில் எல்லாம் சிங்­களக் கிரா­மங்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன. அவர்­க­ளுக்­கென்றும் தனி­யான கலா­சாரம் உண்டு. மலை­ய­கத்­திலும் சிறு­பான்­மை­யாக தமி­ழர்கள் வசிக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கும் புறம்­பா­ன­தொரு கலா­சாரம் உண்டு. இவை­யெல்லாம் கருத்திற் கொண்டு சகல இனங்­க­ளையும் அனு­ச­ரித்துச் செல்­லக்­கூ­டிய அர­சியல் தீர்­வொன்றைப் பெற்றுக் கொடுப்­பதே யுத்­தத்தின் பின் நாம் மேற்­கொண்­டி­ருக்க வேண்­டிய முதற்­ப­ணி­யாகும். அத்­துடன் யுத்தம் முடிந்த கையோடு, அர­சியல் தீர்­வொன்­றுக்கு வந்­தி­ருக்க வேண்டும். சமஷ்டி முறை­யொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அல்­லது அதற்கு நிக­ரான அர­சியல் முறை­மை­யொன்றைக் கொண்டு வந்­தி­ருக்க வேண்டும். இதற்கு மேலும் இன்னும் ஏதும் செய்ய வேண்­டு­மாயின், தமிழ் மக்­க­ளையும் ஒன்­றாக இணைத்துக் கொள்­வ­தற்­கு­ரிய அர­சியல் தீர்­வொன்­றுக்கு வர­வேண்டும். இதன் பிறகே உண்­மை­யான வெற்­றி­யென்று சிங்­கள மக்­களால் கொண்­டாட முடியும். 
கே:முஸ்­லிம்கள் மீதான எதிர்ப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள்?
நான் முஸ்லிம் சமூகம் சார்­பாக பேசி­வ­ரு­வது குறித்து முஸ்லிம் சகோ­த­ரர்கள் நன்­க­றி­வார்கள். வட புலத்­தி­லி­ருந்து அன்று முஸ்­லிம்­களை வெளி­யேற்­று­வ­தற்கு பிர­பா­கரன் தீர்­மானம் எடுத்­த­போது, அதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்தேன். நான் முஸ்லிம் மக்­க­ளுக்­காக கவி­தைகள் கூட வடித்­தி­ருக்­கிறேன். இதே­நேரம் நான் சிங்­கள மக்­க­ளிடம் முஸ்­லிம்கள் உங்­க­ளுடன் ஒன்­று­பட்டு செய­லாற்­றி­ய­தொரு சமூ­க­மல்­லவா? என்று கேட்க விரும்­பு­கிறேன். வர­லாற்று நெடு­கிலும் இடம்­பெற்ற இனப்­பூ­சல்­களின் போது, முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் தான் இருந்­தார்கள். அதனால் சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டு­வ­தற்கு எந்த வகை­யிலும் நியா­ய­மில்லை. எனவே எந்தப் பிரச்­சி­னை­யா­னாலும் சரி சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் பேசித் தீர்த்துக் கொள்­வதே சரி­யான வழி­யாகும். 
கே:யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதை சிங்­க­ள­வர்கள் தவ­றான அர்த்தம் கொண்­டுள்­ள­தாக குறிப்­பி­டு­கி­றீர்­களே, அது குறித்து இன்னும் விளக்­க­மாகக் கூற­லாமா?
இந்த விடயம் குறித்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­யும்­படி சிங்­க­ள­வர்­களை நான் கேட்டுக் கொள்­கிறேன். தமி­ழர்கள் நிரந்­த­ர­மாக முட­மாக்­கப்­பட்டு விட்­ட­தா­கவே சிங்­க­ள­வர்கள் எடை போட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். பௌதிக ரீதியில் மஹிந்த ராஜபக் ஷ காலத்­தி­லேயே யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு விட்­டது. ஆனாலும் அதன் பின்னர் வடக்கின் நிலைமை நன்­றாக அமை­ய­வில்லை. கடும் மோச­மான நிலையே தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அங்கு மிகவும் பீதியே நில­வி­யது. இந்த புது அரசு பத­விக்கு வந்­த­துடன் அந்த நிலை மாறி­யது. ஆனாலும் இப்­போது பிரச்­சினைத் தீர்வில் காலம் கடத்­தப்­ப­டு­கி­றது. 
யுத்­தமும் இல்­லாத சமா­தா­னமும் இல்­லாத நிலை ஒன்றே இன்று நாட்டில் நில­வு­கி­றது. உண்­மை­யி­லேயே தமிழ் மக்கள் 1983 க்கு முன்­னுள்ள நிலைக்கோ அல்­லது யுத்­தத்­துக்கு முன்­பி­ருந்த நிலைக்கோ சென்று விட்­ட­தாக நான் கரு­த­வில்லை. யுத்­தத்தில் தமி­ழர்கள் அணு­கிய யுத்த வடி­வம்தான் தோல்வி கண்­டது. ஆனால் உண்­மையில் தமிழர் போராட்டம் உலக தமிழ் மக்­களின் ஒரு தனித்­துவ அடை­யா­ள­மாக மாற்­றங்­கண்­டது. யுத்த முடிவில் தமிழ் மக்கள் பாரிய பௌதிக இழப்பைச் சந்­தித்­தனர். 
பாரிய விலை­யையும் செலுத்­தினர். ஆனாலும் தமிழ் மக்­களின் போராட்டம் வீண் போன ஒன்­றாகக் கரு­து­வ­தற்­கில்லை. இன்று யாரும் மலே­சியா, சிங்­கப்பூர், மொரி­சியஸ் போன்ற நாடு­க­ளுக்குச் சென்றால், இதனை நன்கு உணர்ந்து கொள்­ளலாம். அங்­குள்ள தமி­ழர்கள் தென் இந்­தி­யா­வையோ அல்­லது இலங்­கை­யையோ சேர்ந்­த­வர்கள் அல்லர். விஷே­ட­மாக மொரி­சி­யஸில் வாழும் தமி­ழர்­க­ளுக்கு தமிழ் மொழி தெரி­யாது. ஆனால் இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் விளை­வாக தமிழ் மொழி தெரி­யாத மொரி­சியஸ் தமிழ் மக்கள் தனித்­துவ அடை­யா­ளத்­துடன் தம்மை உட்­ப­டுத்திக் கொண்­டுள்­ளார்கள். தென் ஆபி­ரிக்­கா­விலும் நிலைமை அவ்­வாறு மாறி­விட்­டது. 
உல­க­ளவில் தமிழ் தனித்­துவ அடை­யா­ளத்­துடன் கூடிய மிகவும் பெரிய புலம்­பெயர் சமூ­க­மொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. பூகோள மட்­டத்­திலும் அது வியா­பித்­துள்­ளது. கனடா நாட்டை உற்று நோக்­கினால் அங்­குள்ள பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­யொ­ருவர் நிய­மனம் பெற்­றுள்ளார். ஒஸ்லோ நக­ரத்தில் பிர­தி­மே­ய­ராக இரு­பத்­தேழு வய­து­டைய இளம் தமிழ் பெண்­ம­ணி­யொ­ருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். உலகம் முழு­வ­தி­லு­முள்ள தமிழ் மக்கள் ஓரி­ன­மாக ஒன்­று­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். உலகில் எந்த இடத்­திற்கும் சென்று நாம் பார்ப்­போ­மே­யானால், அங்கு உலகின் எந்த நாட்­டி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து வந்து வாழும் தமி­ழ­ரிடம் உங்கள் தலைவன் யார் என்று வின­வினால் அவர்கள் அனை­வரும் ஒரே தலை­வரின் பெய­ரைத்தான் கூறு­வார்கள். 
தமிழ் மக்கள் யுத்­தத்தில் பாரிய விலை கொடுத்துப் பெற்ற பெரும் பெறு­பேறு இதுதான். சர்­வ­தேச மக்கள் மத்­தியில், உல­க­ளவில் பரந்து வாழும் தமிழ் மக்­க­ளுக்­கென்று ஓர் உய­ரிடம் இருக்­கவே செய்­கி­றது. தமிழ் மக்­க­ளுக்கு இழப்­ப­தற்கு வேறு ஏதும் இல்லை என்று கூறும் அள­வுக்கு அவர்கள் யுத்­தத்தில் இழந்­துள்­ளார்கள். இறு­தி­கட்ட யுத்­தத்தில் அவர்கள் அடைந்த அனு­ப­வங்கள் மறப்­ப­தற்­கில்லை. தமிழ் மொழி பேசும்  கார­ணத்­திற்­காக இலங்கைத் தமிழ் பெண்கள் அனு­ப­வித்த துன்ப துய­ரங்கள் சொல்­லுந்­த­ர­மன்று. இவர்­க­ளுக்கு மனி­தா­பி­மானம் காட்­டப்­பட்­டதா? இந்தக் கொடூ­ரங்­களை அவர்கள் எளிதில் மறந்­து­விட மாட்­டார்கள். இன்று தமிழ் மக்கள் உல­க­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளார்கள். 
கே:இலங்­கை­யி­லுள்ள  தமிழ் மக்கள் உள்­நாட்டு ஜன­நா­ய­கத்தை நம்பி வாக்­க­ளித்­தார்கள் அல்­லவா? 
அப்­படி சொல்­வ­தற்­கில்லை. கடந்த இரு ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் தமிழ் மக்கள் ஒரே நிலைப்­பாட்­டிலே இருந்­தார்கள். அவர்கள் தம் முத­லா­வது  எதி­ரிக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தார்கள். தமது முதல் எதி­ரி­யாக மகிந்த ராஜபக் ஷவையே கண்டு கொண்­டார்கள். சிங்­க­ள­வர்கள் எப்­படி யுத்­தத்தை வெற்றி  கொண்­டார்கள் என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
பெரும் இழப்­புக்­களை சந்­தித்தே யுத்­தத்தை  வென்­றெ­டுத்­தார்கள். பெரும் தொகை­யான கடன்  பெற்றே பெரிய இரா­ணுவம் ஒன்றை அமைத்­தார்கள். நாட்டை விற்­றார்கள்.  இவ்­வா­றெல்லாம் மேற்­கொண்­ட­தனால் மட்டும் யுத்­தத்தை வெற்றி கொள்­ள­வில்லை.வெற்­றிக்கு பிர­பா­கரன்  கடைப்­பி­டித்த நோக்­கங்­களும் கார­ண­மா­யின. அவர் இந்­தி­யாவை ஆண்ட  பாரி மன்­ன­னாகத் தன்னைக் கரு­தினார். நிபந்­த­னை­யற்ற  சுதந்­தி­ர­மொன்றைப் பெற எண்­ணினார். அதனால்  எண்­ப­து­களில் இந்­தியா, பாதி­ய­வி­லான சமஷ்டி முறை­யொன்றை முன்­வைத்தும் அதற்கு இணங்க  மறுத்தார். அவர் பூரண சுதந்­திர நாட்­டையே விரும்­பினார். அப்­போ­தைய ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ மற்றும்  இந்­திய இரா­ணு­வத்­துக்­கெ­தி­ரா­கவும் போரிட்டார். அமெ­ரிக்கா தலை­யிட்­டாலும் கூட,  அதற்­கெ­தி­ரா­கவும் சண்­டை­யி­டு­வ­தா­கவும் பிர­பா­கரன் சூளு­ரைத்தார்.
இதன் விளை­வாக இந்­தியா மற்றும் சர்­வ­தேச  சமூ­கங்­களின் எதிர்ப்­பையே அவர் சம்­பா­தித்­துக்­கொண்டார். தமிழ் மக்­க­ளுக்கு உத­வு­வதை விடுத்து பிர­பா­க­ரனின் சுதந்­திரம்  குறித்த  நிலைப்­பாட்­டுக்கு எதி­ராக செயல்­ப­டு­வதே அவர்­களின்  நட­வ­டிக்­கை­யா­க­வி­ருந்­தது. பிர­பா­க­ரனை தேசிய வீரன்  என்று கூட பிரே­ம­தாஸ வர்­ணித்தார். பின்னர் அவரே அக்­க­ருத்தை மாற்றிக் கொண்டார். சிங்­க­ள­வர்கள்  எப்­போதும், இதே விளை­யாட்­டைத்தான் கையாள்­வார்கள்.  பின்னர் பிர­பா­கரன் சிங்­க­ள­வர்­களின் தேசிய எதி­ரி­யானார். 
கே: நீங்கள் குறிப்­பிடும் உல­க­ளா­விய தமிழ் சமூகம்  குறித்தும் அடுத்­து­வரும் சந்­த­தி­யினர் பற்­றியும் மேலும்  விளக்கம் தர­லாமா?
இந்த அர­சியல் யாப்பு முன்­மொ­ழிவு எமது சந்­த­தி­யி­னரின் அர­சி­யலில் இறுதிக் கட்­டத்­தி­லாகும்.  இதன்­பின்னர் தமிழ்த் தலை­வர்­க­ளான சம்­பந்தன்,  சுமந்­திரன், மாவை சேனா­தி­ராஜா, கஜேந்­தி­ர­குமார்  பொன்­னம்­பலம்  ஆகி­யோரின் அர­சியல்  அஸ்­த­ம­ன­மா­கி­விடும். சிங்­கள தலை­வர்­க­ளான மஹிந்த  ராஜபக் ஷ, மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் அர­சியல் வாழ்வும் முற்­று ­பெறும். சம்­பந்­தன்கள் மீண்டும் உரு­வாகுவதில்லை. 
புதி­ய­தொரு அர­சியல் உருப்­பெரும்  இன்று டுவிட்டர்,  முகநூல் போன்­ற­ன­வற்­றி­னூ­டாக அர­சியல்  செய்­கி­றார்கள். ஆட்­சியை மாற்­றி­ய­மைக்­கின்­றனர். புதிய சந்­த­தி­யினர் முன்­னைய அனு­ப­வங்கள் ஊடாக பாடம் படித்துக் கொள்வர். அவர்கள் நவீன அறி­வாற்­ற­லுடன்  பணி­யாற்­று­வார்கள். வளர்ச்சி பெற்ற அறி­வோடு  செயற்­ப­டு­வார்கள். அத்­த­கைய அர­சியல் நட­வ­டிக்­கைகள் அமெ­ரிக்கா, கனடா, சென்னை போன்ற நாடு­களில்  இருந்­துதான் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன. அதனால்  அவற்றைத் கட்­டுப்­ப­டுத்த இய­லா­து­போகும். தடுத்து நிறுத்­தவும் முடி­யா­தி­ருக்கும். 
அவர்கள் பிர­பா­கரன் எண்­ணி­யது போன்று பூரண  சுதந்­தி­ரத்தில் நம்­பிக்கை வைப்­ப­தில்லை. உல­க­ம­ய­மாக்­க­லுக்­குள்­ளி­ருந்தே ஒத்­து­ழைப்­பு­ட­னான  சுதந்­தி­ரத்­தையே இவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இது புதிய  அமைப்­பி­லா­ன­தொரு சமா­தான முறை­யாகும். இப்­போது பந்து, சிங்­கள தலை­வர்­களின்  கரங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கி­றது. அவர்கள் பந்தை எப்­படி விளை­யாடப் போகி­றார்­களோ அதில்தான் நாட்டின் எதிர்­காலம்  தங்­கி­யி­ருக்­கி­றது. ஒன்றோ புதி­ய­தொரு சமா­தான சூழ்­நிலை. இன்றேல் புதி­ய­தொரு யுத்தம் இந்த இரண்டில்  ஒன்­றையே நாடு அனு­ப­விக்கப் போகி­றது. 
கே: சிங்­களத் தலை­வர்கள் இப்­போது செய்ய வேண்­டி­ய­தென்ன?
இன்­றுள்ள பரம்­ப­ரையில் தமிழ், சிங்­களம்,  முஸ்லிம் மக்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு  காணக்­கூ­டிய  இறு­தி­யான ஒரே சந்­தர்ப்பம் புதிய  அர­சியல் யாப்­பே­யாகும். அர­சியல் மறு­சீ­ர­மைப்­பொன்று  உரு­வாக்கம் பெறும் பட்­சத்தில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகமும், சர்வதேச தமிழ் மக்களும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய  அர்ப்பணிப்புச் செய்வார்கள். சென்னை இலங்கைக்கு  பரந்தளவிலான சந்தை வசதியொன்றை உருவாக்கிக் கொடுக்கும்.  அப்போதுதான்  நாம் யுத்தத்தை வென்றெடுத்தோம் என்று சிங்கள மக்களால் மார்பு தட்டிக்கொள்ள முடியும். இந்தப் பொருளாதார விருத்தி  உண்மையிலேயே சமாதான காலத்தில்   முன்னெடுக்கப்பட்டதொன்றாகும். இலங்கையின்  ஏராளமான உற்பத்திப் பொருட்கள் சர்வதேசமெங்கும் சந்தைப்படுத்தப்பட்டன. 
டெல்மா தேயிலை உட்பட பெயர்போன வர்த்தக நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் வெளிநாடுகளில் விற்பனையான காலமும் அதுவே. யுத்தம் மோசமான  கட்டத்தையடைந்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சந்தையில் இலங்கையின் உற்பத்திகளைப்  பகிஷ்கரித்தனர். கடைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுத்தனர். ஒரு சில கடைகளில் காணப்பட்ட இலங்கைப் பொருட்களை  அழித்து நாசம் செய்தனர். 
அடுத்து சிங்களவர்களின் தேசாபிமானத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. அடுத்து பெரும்பான்மையினர் என்ற வகையில் சிங்களவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அதற்கவர்கள் செய்ய வேண்டியதென்ன? உலகமயமாக்கலை வெற்றி கொள்வதிலேயே உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது. இப்போது அவர்களின் இனப்பற்றிலே பிரச்சினையொன்றிருக்கிறது. அவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்.  
முந்திக்கொண்டு போகும் ஓர் இனமாக மாறக்கூடாது.  அத்துடன் தமது யுத்த வெற்றியில் சிறைக் கைதிகளாக சிங்களவர்கள் ஆளாவதும் நல்லதல்ல. எமது சந்ததிகளான  தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமஷ்டி முறையொன்று குறித்து கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளனர்.  தவறும் பட்சத்தில் அடுத்துவரக்கூடிய சந்தயினர் சர்வதேச  சமூகத்துடனோ அல்லது  இந்தியாவுடனோ  இணைந்து சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்தும்  கலந்துரையாடலுக்கு தயாராவது தவிர்க்க முடியாது   போகும். 
நன்றி: ராவய
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்