மூதாட்டியின் சிகிச்சைக்கு சேகரித்த பணத்தை பறித்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்


சிகிச்சை பெற போயா தினமன்று பௌத்த விகாரைக்கு முன் பணம் சேகரித்த பெண் ஒருவரிடம் இருந்து 720 ரூபா பணத்தை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பறித்து சென்ற சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுர உடமழுவ பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தம்மை கைது செய்வதாக மிரட்டி தம்மிடம் இருந்த 720 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தொன்றில் உபாதைக்குள்ளான தனது காலுக்குச் சிகிச்சை செய்ய 12,000 ரூபாய் தேவை என்பதால், இந்த பணத்தொகையை குறித்த பெண் சேகரிக்கும் போதே இந்த சம்பவம் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது