ஹாபிழ்கள் ஒன்றியத்தை துவுக்கி வைத்தார் நசீர் அஹமட்; ஹக்கீமுக்கும் சிறப்பு ஆடை

கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஹாபிழ்கள் ஒன்றிய அங்குரார்ப்பணம் மற்றும் குல்லியது தாரில் உலூம் கலாபீட பட்டமளிப்பு விழா நிகழ்வு இன்று (30) ஏறாவூரில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியா கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர் அவர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அறிஞர்களும் மெளலவிமார்கள், ஹாபிழ்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் ஹக்கீமும் சிறப்பு ஆடை மேலங்கி அணிந்திருந்தார்.