முஸ்லிம் திணைக்களத்தின் முஹர்ரம் புதுவருட நிகழ்வு இன்று! #MuharramSrilanla


எம்.எஸ்.எம்.ஸாகிர்

முஹர்ரம் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனம் மற்றும் கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேனம் ஆகியவற்றோடு இணைந்து நடாத்தும் முஹர்ரம் புதுவருட நிகழ்வு நாளை (25) திங்கட்கிழமை மாலை 04.00 மணிக்கு கொழும்பு - 10, இல 310 டீ. ஆர். விஜேவர்தனமாவத்தையிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில்  இடம்பெறும்.

தபால்தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம். மலிக் (நளீமி) வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் நடைபெறும் இந்நிகழ்வில்முஹர்ரம் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள்கலை நிகழ்ச்சிகள்அஹதியா ஆசிரியர்கள் மற்றும் அஹதியா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.