மகிந்தவும் சூகியும் ஒரேமாதிரி்; சிறிதுங்க ஜயசூரிவின் பரபரப்பு வாக்குமூலம் #Muslimsமியன்மாரின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்குமாறு மியன்மாரின் அதிகாரபூர்வமற்ற அரச தலைவரான ஆங் சாங் சூகியிடம் கேட்டுக்கொள்வதறாக ஐக்கிய சோசலிய முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மியன்மாரில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள மியன்மார் தூதரகத்திற்கு எதிரில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் 10 வயதுக்கும் குறைந்த சிறார்கள்.
சூகி, பௌத்த மதத்திற்கு அடி பணிந்து பௌத்த சமயத்தை பாதுகாக்க முன்னெடுத்து வரும் இராணுவ ஆட்சி காரணமாக ஐக்கிய நாடுகளின் 72 வது மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவில்லை எனில் எந்த நாடும் முன்னேற்றமடையாது.
மியன்மாரில் சூகி அதிகாரத்திற்கு வந்தும் அவரால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது போயுள்ளது.
இனவாதத்தை, மதவாதத்தை தூண்டி தமது தோல்வியை மறைத்து ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வது இலங்கை உட்பட மூன்றாம் உலக நாடுகளின் சிறந்த கலையாக மாறியுள்ளது.
இலங்கையில் கடந்த ஆட்சியாளர்களும் இதனையே செய்தனர். தற்போதுள்ள ஆட்சியாளர்களும் அதனையே செய்கின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்து சென்றும் மகிந்த ராஜபக்ச அதனையே செய்து வருகிறார்.
பௌத்த மதத்தையும் சிங்களவர்களையும் தூண்டி விட்டு ஆட்சி வர முயற்சித்து வருகிறார். சூகியும் மியன்மாரில் இதனையே செய்கிறார் என சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.