சமூகவலைத்தள பாவனையால் தலாக்-பஸ்ஹூ சொல்லும் இன்றைய சமூகம் #MuslimsLKஉலகம் முழுவுதும் தொடர்பாடல் சாதனங்களை பின்தள்ளிவிட்டு சமூக வலைத்தளங்கள் முன்னோக்கி செல்வதை காணக்கூடியதாய் உள்ளது, இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம். இன்று பேஸ்புக் முதல்கொண்டு வாட்ஸ்அப் வைபர் ஐ.எம்.ஓ போன்ற அப்ளிகேசன்கள் குரல் மற்றும் வீடியோ வழி சாட்டிங்கு உதவுகின்றன.

இன்று அதிகப்படியான முஸ்லிம்கள் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர், இவர்களின் மனைவிமார் இலங்கையில் வசிக்கின்றனர். இவர்கள் தொடர்பு கொள்ள மேற்சொன்னவற்றை பாவிக்கின்றனர். அனைத்தும் பகிரப்படுகிறது. இது நமது கணருக்கு தானே அனுப்புகிறோம், மனைவிக்கு தானே அனுப்புகிறோம் என்று எண்ணுகின்றனர் ஆனால் அவைகள் யஹூதிகளின் சேவர்களுக்கு சென்று மீளத்தான் வருகிறது இது ஒரு புறம், காதல் என்ற பெயரில் ஆடையின்றிய புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்படுகின்றன அந்த காதல் பிரிந்தால் குறித்த பெண்களின் நிலை என்ன? 

இவற்றையெல்லாம் தாண்டி மற்றைய ஆணின் துணைவி, மற்றைய மனைவியின் கணவனுடன் பேசி பழகி சமூக வலையில் கொஞ்சிக் குலாவி செக்ஸ் புகைப்படங்களை செயார் செய்து மாட்டிக்கொண்டதன் விளைவாக பல குடும்பங்கள் இன்று பிரிந்துள்ளது. இன்னும் எத்தனை குடும்பங்கள் பிரிய எத்தனித்துக் கொண்டிருக்கிறது. 

ஏன் இந்த கீழ்த்தரமான வேலை, ஏன் இந்த மோகம் இஸ்லாத்தின் அடிப்படையில் வாழப்பழகி கொள்வோம் அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக