Sep 27, 2017

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலமளியுங்கள்; NPC வேண்டுகோள்ஹஸன் இக்பால் 
இலங்­கையில் அடைக்­கலம் கோரும் மியன்­மாரின் ரோஹிங்ய முஸ்­லிம்­களை திருப்பி அனுப்­புதல் தொடர்­பான தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு தேசிய சமா­தான பேரவை  அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 
ரோஹிங்ய அக­திகள் தொடர்பில் கரி­சனை கொள்­ளு­மாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசை கோரி­யுள்­ள­தையும் அவ்­வ­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 
அவ்­வ­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது, மியன்­மா­ரி­லி­ருந்து ரோஹிங்ய முஸ்­லிம்கள் பெருந்­தொ­கையில் வெளி­யேறி வேறு நாடு­க­ளுக்கு தஞ்சம் கோரி வரு­வது சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும், அதன் ஓர் அங்­க­மான இலங்­கை­யி­னதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. இவ்­வாறு வெளி­யேறும் ரோஹிங்ய முஸ்­லிம்கள் பெரும்­பாலும் பங்­க­ளாதேஷ், இந்­தியா மற்றும் மலே­ஷியா போன்ற அயல்­நா­டு­களில் அக­தி­க­ளாக அடைக்­கலம் பெற்­றுள்­ளனர். மிக சொற்­ப­மான ரோஹிங்ய அக­தி­களே இலங்­கையில் அடைக்­கலம் பெற முயற்­சித்­தனர். 
பெண்கள், குழந்­தைகள் என்று பார­பட்­ச­மின்றி பல வரு­டங்­க­ளாக தொடரும் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அட்­டூ­ழி­யங்கள் கடந்த சில வாரங்­களில் முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் அதன் உச்­சத்தை அடைந்­துள்­ளன எனலாம். 
இலங்­கைக்குள் நுழையும் ரோஹிங்ய மக்­க­ளுக்கு அனு­ம­தியை ரத்துச் செய்­யு­மாறு இலங்கை அர­சினால் குடி­வ­ரவு அதி­கா­ரிகள் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் ‘தேசிய சமா­தானப் பேரவை’ மிகுந்த வேதனை அடை­கி­றது. அக­திகள் என்றும் கருத்­திற்­கொள்­ளப்­ப­டாது அவர்கள் திருப்பி அனுப்­பப்­படுவது வருத்­தத்­துக்­கு­ரிய விடயம். 
மியன்­மாரில் வன்­மு­றைகள் கார­ண­மாக சொத்­துக்­க­ளையும் வாழ்­வி­டங்­க­ளையும் நேசத்­துக்­கு­ரி­யோ­ரையும் இழந்து தவிக்கும் குறிப்­பிட்ட சமூ­கத்­த­வர்­களின் இந்த நிர்க்­கதி நிலை ஒரு­வ­கையில் இலங்­கையில் இடம்­பெற்ற நிகழ்­வு­களை எதி­ரொ­லிப்­பதாய் இருக்­கின்­றது. மூன்று தசாப்­தங்­க­ளாக இடம்­பெற்ற இன முரண்­பாடு, பயங்­க­ர­வாதம் மற்றும் உள்­நாட்டுப் போர் கார­ண­மாக ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் உலகில் பல்­வேறு நாடு­க­ளிலும் அக­தி­க­ளாக தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.
இலங்­கை­யர்­க­ளாகிய நாம் அவர்­களை இழந்து விட்டோம். ரோஹிங்ய முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக இலங்­கைக்குள் நுழை­வதை தடுக்கும் இலங்கை அரசின் நிலைப்­பாட்டை மீள் பரி­சீலனை செய்­யு­மாறு தேசிய சமா­தானப் பேரவை வலி­யு­றுத்­து­கின்­றது. எமது நாட்­டி­லி­ருந்து புக­லிடம் கோரிச் சென்­ற­வர்­க­ளுக்கு ஏனைய நாடுகள் அடைக்­கலம் வழங்­கி­ய­தற்கு நன்­றிக்­கடன் செலுத்தும் வித­மாக மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நாமும் அக­தி­களைப் பொறுப்­பேற்க வேண்டும். ஐ.நாவின் அங்­கத்­துவ நாடு என்­ற­வ­கையில் அக­திகள் நிலைப்­பாட்டில் விழு­மி­யங்­களை பேணி­ய­வாறு சர்­வ­தேச பொறுப்­புக்­களில் பங்­கேற்க வேண்டும் எனும் கடப்­பாடு இலங்­கைக்கு உள்­ளது.
பிராந்­தி­யத்தில் அமை­தியை நிலை­நாட்டும் வகையில் வன்­மு­றை­களை உட­ன­டி­யாக முடி­வுக்கு கொண்­டு­வர காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என மியன்மார் அர­சுக்கு அழுத்­தங்­களை வழங்­கு­மாறும், சர்­வ­தேச  தன்­னார்வ அமைப்­புக்கள் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­கு­மாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அரசைக் கோரி­யுள்­ள­மையை மேற்கோள் காட்­டு­கின்றோம். 
இலங்கை மத ரீதியாக பிணைக்கப்பட்ட, இறுக்கமான உறவுகளை மியன்மாருடன் நீண்டகாலமாகப் பேணி வருகின்ற நாடாகும். பல தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டு போர் மற்றும் முரண்பாடுகளை களைந்து சமரச இணக்கப்பாடுகளை நோக்கி நடைபயிலும் நாடாக இலங்கை இருக்கின்றபோதிலும், மியன்மார் நாட்டுக்கும் மியன்மார் மக்களுக்கும் தேவையின்போது உதவ வேண்டிய தார்மீகக் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network