பாகிஸ்தான் - ஈரான் முஸ்லிம் அகதிகள் உட்பட 1333 அகதிகள் இலங்கையில் தஞசம்

Oct 4, 20170 comments


அரசியல் புகலிடம் தேடி வந்தோர் மற்றும் அகதிகளாக வந்தோர் 1333 பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் செயலகத்தின் பொறுப்பில் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து 728 பேர் அகதிகளாகவும் 605 பேர் அரசியல் புகலிடம் கோரியும் இலங்கையில் தங்கியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசியல் புகலிடம் கோரி வந்தவர்கள் மேற்படி செயலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு அவசியமென்பது உறுதிப்படுத்தப்பட்டால் பொருத்தமான நாட்டுக்கு இவர்கள் அனுப்பப்படுவர் என்றும் அதற்கு அவசியமில்லாவிட்டால் அவர்கள், அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அகதிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தற்காலிகமாகவேயன்றி அவர்கள் நாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கு இடமளிக்கப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான செயலகத்தின் பாதுகாப்பிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் இதுவிடயத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமென்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் (03) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின் படி இலங்கையில் கடந்த ஆகஸ்ட் (31) பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் மொத்தமாக 728 பேராகும். இவர்களில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 113 பேரும் ஈரான் பிரஜைகள் ஏழு பேரும் மாலைதீவு பிரஜைகள் எட்டு பேரும் மியன்மார் 35 பேரும், பாகிஸ்தான் பிரஜைகள் 533 பேரும், பலஸ்தீன் 10 பேரும் சோமாலியா பிரஜை ஒருவரும் சிரியாவிலிருந்து 14 பேரும் துனீஸியாவிலிருந்து ஒருவரும் யெமனிலிருந்து ஆறு பேருமாக 728 பேர் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இலங்கை அரசாங்கம் 51 ஆம் ஆண்டின் அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்காவிட்டாலும் மனிதாபிமான ரீதியில் புகலிடம் கோரி வருபவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களை தற்காலிகமாக தங்க வைத்து மீள அனுப்பி வைக்கும் பொறுப்பை இதேநிலை தான் இந்தியாவிலும் காணப்படுகின்றது.
Share this article :