அசாத் சாலியின் முயற்சியின் பயனால் 170 மௌலவி ஆசிரியர்களுக்கு நியமனம்நுசாக் - சிலோன் முஸ்லிம் இரத்தினபுரி செய்தியாளர்

அரச பாடசாலையில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரம்பப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை பொதுச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது. 170 மெளலவி  ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளனர்.  

தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி பொதுச் சேவை ஆணைக் குழுவின் தலைவருடன் கலந்துரையாடிய பின்னே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மௌலவி ஆசிரியர் நியமனத்திற்காக அரசாங்க வர்தமானியில் 20 ம் திகதிக்கு முன் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .