அதாஉல்லா நாடகமாடுகிறார்; மஹிந்தவின் கை்க்கூலியே அவர்; ஹக்கீம் காட்டம்சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும், மஹிந்தவின் கைக்கூலியாகவும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா நாடகமாடுவதாக அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.,

தற்பொழுது நேரலையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  இதனை அவர் குறிப்பிட்டார், வடக்கும் கிழக்கும் இணையப்போவதாக ஊர் ஊராக சென்று பொய்யான பிரச்சாரங்களை செய்துவரும் அதாஉல்லா கடந்த தேர்தலில் எவ்வாறு தோல்வியுற்றார் என்பது மக்களுக்கு தெரியும், வடக்கும் கிழக்கும் ஒருபோதும் இணையாது அப்படி இணைவதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் இது இந்த ஜென்மத்தில் இடம்பெறாது என குறிப்பிட்டார்.