Oct 25, 2017

வடக்கு கிழக்கு இணைப்பு - முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலைப்பாடு; முழுவிவரம்


இலங்­கையின் இன்­றைய தேசிய இனப்­பிரச்சினை சிங்­கள மக்­க­ளி­னதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளி­னதும் பிரச்­சி­னை­யாக மாத்­திரம் பார்க்­கப்­படக் கூடாது. தேசிய இனப்­பி­ரச்­சினை என்­பது வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள், தென்னிலங்கை முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் ஆகி­யோ­ரையும் உள்­ள­டக்­கி­ய­தாகும். இந்த உண்­மையை நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெடுக்கும் அமைதித் திட்­டங்­களில் நினை­வு­கூர வேண்டும். இதனை ஏற்­றுக்­கொள்­வதிலுள்ள மனத் தடைகள் நீக்­கப்­பட வேண்டும். இந்தக் குறு­கிய பார்வை அகற்­றப்­பட்டு, பரந்த கண்ணோட்­டத்தில் இப்பிரச்­சினை பார்க்­கப்­பட வேண்டும்.
தற்­போது ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பைக் கைவிட்டு சமஷ்டி ஏற்­பாடு குறித்து அர­சாங்கம் சிந்­திக்கத் தொடங்­கி­யுள்­ளது. சமஷ்­டிக்குக் குறைந்த எந்த அர­சியல் நிலைப்­பாட்­டையும் ஏற்­றுக்­கொள்ளும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை என்­பதும் உறு­தி­யா­கின்­றது. இச்சூழ்நிலையில், வடக்கு கிழக்கு இணைப்புப் பற்­றிய கோரிக்­கைகள் மீளவும் மேலெழுந்துள்­ளதை சமீ­பத்­திய அர­சியல் மேடை­களில் அவ­தா­னிக்­கலாம். 
தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்து வைப்பதற்­கான பேச்­சு­வார்த்­தை­களில், அத­னூடு எட்­டப்­படும் முடி­வு­களில் முஸ்லிம் காரணி புறந்­தள்­ளப்­படும் அபா­யத்தை இம்­மு­றையும் நாம் எதிர்­கொள்ளக்கூடாது. இதில் முஸ்லிம்  சிவில் சமூகம் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன் செயலாற்ற வேண்­டி­யுள்­ளது. 
ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பை மாற்றி, சமஷ்டி அல்­லது கூட்­டாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்­டிய நிர்ப்­பந்தம் அரசின் மீது திணிக்­கப்­ப­டு­கின்­றது. மேற்கு நாடு­களிலிருந்து இந்த நிர்ப்­பந்­தத்தை அர­சாங்கம் எதிர்­கொண்­டுள்­ளது. இணைந்த வடக்கு, கி­ழக்கில் அந்த சமஷ்டித் தீர்வு நடைமுறைக்கு வர வேண்டும் என தமிழ்த் தரப்பு அழுத்­த­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது. 
கடந்த காலங்­களில் இணைக்­கப்­பட்ட (முஸ்லிம் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­கவும் முஸ்­லிம்­களை கலந்­தா­லோ­சிக்­கா­மலும்) வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சிறு­பான்மை மக்களுக்கு என்ன நிகழ்ந்­தது என்­பதை இந்­நாடு நன்கு அறியும். முஸ்­லிம்­களும் இலங்­கையின் தேசிய இனம் என்­பதும் இனப்பிரச்­சினைத் தீர்வில் முஸ்லிம் தரப்பும் தட்டிக் கழிக்க முடி­யாத பங்­கா­ளிகள் என்­பதும் அந்த இணைப்பின் போது வச­தி­யாக மறக்­கப்­பட்­டது. 
இலங்­கை- - இந்­திய ஒப்­பந்தம் நள்­ளி­ர­வோடு நள்­ளி­ர­வாக முஸ்லிம் சமூ­கத்தை நாதி­யற்­றவர்களாக நடுத்­தெ­ருவில் நிறுத்­தி­யது. அவர்­க­ளது குரல்கள் நசுக்­கப்­பட்டு, கைக­ளிலும் கால்களிலும் விலங்­குகள் பூட்­டப்­பட்­டன. பேரினவாதம் போன்று அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட தமிழ் குறுந் தேசி­ய­வா­தமும் முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆபத்­தா­ன­துதான் என்ற உண்­மையை முஸ்லிம்களுக்கு அது உணர்த்­தி­யது. 
முஸ்லிம் பிர­தே­சங்­களில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட தமிழ் நிர்­வாகிகளாலும் திட்­ட­மிட்டு நடாத்­தப்­பட்ட இனப்­படு கொலை­களும் இன ஒதுக்­கலும் தமிழ் ஆதிக்­கத்தின் கீழ் முஸ்­லிம்கள் வாழ முடி­யாது என்ற உண்­மையை வலு­வாக நிலை­நி­றுத்­தி­யி­ருந்­தது. 
1987 ஒப்­பந்­தத்தின் பின்னர் வடக்குக் கிழக்கு சிறுபான்மை முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காக்கும் நிலையில் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இருக்­க­வில்லை.
இலங்கை அர­சாங்­கத்தின் ஆட்­சி­ய­தி­கார மாற்றத்தை ஏற்­ப­டுத்தக் கார­ண­மாகி, சமா­தான சூழ­லுக்கு முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் வழி­வ­குத்த தற்போதைய முஸ்லிம் தலை­மை­க­ளா­னது வழ­மை­போன்று மிக மோச­மான அர­சியல் தவ­று­களை இழைக்கக் கூடிய ஆபத்து மீளவும் எழுந்­துள்­ளது. 
இது­வரை இம்­முஸ்லிம் தலை­மைகள் சமூ­கத்தில் எவ்­வி­த­மான, காத்­தி­ர­மான அர­சியல் உரை­யாடல்களையும் நடத்­த­வில்லை. சமூ­கத்தைச் சூழ்ந்­துள்ள அர­சியல் நிலை­மைகள், பேச்­சு­வார்த்­தைகள், தீர்வுத் திட்­டங்கள், அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், தேர்தல் முறை சீர்­தி­ருத்தம், எல்லை மீள்­நிர்­ணயம் தொடர் பாக நமது மக்­களை ஆழ்ந்த மயக்­கத்தில் வைத்­தி­ருக்­கவே முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் விரும்­பு­கின்­றன. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் சமீ­பத்­திய போக்­குகள் இத­னையே தெளி­வாக எடுத்­து­ரைக்­கின்­றன. 
சிவில் சமூ­கத்­தி­லி­ருந்து எழும் தன்­னி­யல்­பான அர­சியல் உணர்­வுகள் திரட்­சி­ய­டை­யும்­போது சமூக நிறு­வ­னங்­களால் முன்­வைக்­கப்­படும் தீர்வுத் திட்டங்­க­ளுக்கு செவி சாய்ப்­பது போல் பாசாங்கு செய்யும் அர­சியல் தலை­மைகள் இறு­தியில் அதிகாரத்தில் உள்­ளோ­ருக்கு அடி­ப­ணிந்து வரு­வதே வர­லா­றா­கி­யுள்­ளது. 
முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் இந்த கபடத் தனத்தை நாம் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள வேண்டும். தமிழ் தரப்­பினர் தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரிமை, கலா­சார தாயக பாரம்­ப­ரிய பூமி, தமிழர் தேசம், சமஷ்­டியை உள்­ள­டக்­கிய ஐக்­கிய இலங்கை என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய மாதிரி அர­சி­யலமைப்­பொன்றை முன்­வைத்­துள்­ளனர். 
தமக்­கான அர­சியல் தீர்வுத் திட்டம் குறித்து விரிந்­த­ளவில் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். சமஷ்டியே தமக்­கான தீர்வு என்றும், அது இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வழங்­கப்­பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வரு­கின்­றனர். 
இந்­நி­லையில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்­களின் அர­சியல் கோரிக்கை என்ன என்­பது தெளி­வாக முன்­வைக்­கப்­பட வேண்டும். மங்­க­லான நிலைப்­பா­டு­க­ளி­லி­ருந்து தெளி­வான நிலைப்பாட்டுக்கு வரு­வதும் அவற்றை தேசிய நிலைப்­பா­டு­க­ளாக மாற்­று­வதும் அர­சியல் கட்­சி­களை ஏற்கச் செய்வதும் இன்­றைய சிவில் சமூ­கத்தின் உட­னடிப் பணி­யாக மாறவேண்டும். 
இந்த இடத்தில் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்­றிய சமீ­ப­கால தமிழர் தரப்பு நிலைப்­பாடு  குறித்து பரி­சீ­லிப்­பது அவ­சியம். இணைக்­கப்­படும் வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்கள் மென்­மேலும் சிறு­பான்­மை­யாக்­கப்­ப­டு­வ­தோடு, அதி­கா­ர­மற்ற அப­லை­க­ளாக மாற்­றப்­படும் ஆபத்துள்­ளது என்­பதை முன்­னைய கட்­டு­ரை­களில் வர­லாற்று ரீதி­யிலும் புள்­ளி­வி­பரம் சார்ந்தும் தெளிவுபடுத்­தி­யுள்ளோம். 
அண்­மைக்­கால தமிழ் தேசியக் கூட்­டணியினரின் அர­சியல் மேடை­களில் இணைப்­புக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் எனவும்  சிறு­பான்மை மக்­களின் அர­சியல் ஐக்­கி­யத்தைப் பாது­காக்­கவே இதைக் கோரு­கிறோம் என்றும் கூறி வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் மீதான தமிழ்த் தேசி­யத்தின் இந்தக் கழி­வி­ரக்கம் குறித்து முற்று முழு­தாக விசு­வாசம் கொள்ளும் நிலையில் வட­ கி­ழக்கு முஸ்­லிம்கள் இல்லை. 
10.07-.2016 அன்று வெள்­ள­வத்தை தமிழ்ச்     சங்க நிகழ்­வொன்றில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர். சம்­பந்தன் இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை ஏற்­றுக்­கொள்ள நாம் தயார் என்று கூறி­யி­ருந்தார். அவ­ரது கருத்து பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது. 
“இணைந்த வடக்குக் கிழக்கு மாகா­ணத்தில் ஒரு பக்­கு­வ­மான, படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ராக இருக்­கின்றோம். இதனை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக்­கொள்ள வேண் டும். தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­த­னா­லேயே வடக்குக் கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும் என திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். எமக்கு எதி­ராக எமது போராட்­டத்­திற்கு எதி­ராக பல அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. பிரஜா உரிமைச் சட்டம் பாரா­ளு­மன்றில் சமர்ப் பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து தமிழ் மக்­களின் அர­சியல் பலம் குறைக்­கப்­பட்­டது. 
நாடு சுதந்­திரம் அடைந்­தி­ருந்­த­போது தமி­ழுக்கும் சிங்க ளத்­திற்கும் சம உரிமை வழங்­கப்­பட வேண்டும் என ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டி ருந்­தது. ஆயினும், பின்னர் தனிச் சிங் களச் சட்டம் 1956 இல் நிறை­வேற்றப் பட்­டது. 
பெரும்­பான்­மை­யினம் தமிழ் பேசும் இனங்­களின் பிர­தே­சங்­களில் குடியேற்றப்­பட்­டனர். விஷே­ட­மாக கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றங்கள் மிகத் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. எமது நாட்டில் 1947 ஆம் ஆண்­டுக்கும் 1983 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் சிங்­கள மக்­களின் இயற்கையான அதி­க­ரிப்பு 2.5 வீத­மாகும். இக்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில்  சிங்­கள மக்­களின் அதி­க­ரிப்பு வீதம் 9 ஆகும். தற்­போதும் வடக்கு மாகாணத்தில் இவ்­வி­த­மான நிகழ்­வு­களை நிறைவேற்­று­வ­தற்கு முயற்­சிகள் மேற்கொள்ளப்­ப­டு­கின்­றன. இக்­கா­ர­ணத்தின் நிமித்தம் தான் வடக்கு, கிழக்கு இணைந்திருக்க வேண்டும்; தமிழ் பேசும் மக்களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதை திட­மாக வலியுறுத்­து­கின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். முஸ்லிம் தலை­வர்­களும் புரிந்­து­கொள்ள வேண்டும்." 
சம்­பந்தர் போன்று இன்னும் பல தமிழ் அர­சியல் தலை­மைகள் முஸ் லிம்- - ­த­மிழர் ஒற்­றுமை குறித்து முழங்கி வரு­கின்­றனர். தமிழ் தரப்­புக்கு வழங் கப்­படும் எந்தத் தீர்வுத் திட்­டத்­திற்கும் முஸ்­லிம்கள் எதி­ரா­ன­வர்கள் அல்லர். அதே­வேளை, வடக்கு, கிழக்கில் முஸ் லிம்­க­ளுக்­கான தனியான அதிகாரப் பகிர்வு குறித்த விவாதமும் காலம் கடந்தது. மீளவும் கரையோர மாவட்டம் என்றோ, நிலத் தொடர்பற்ற மாகாண சபை என்றோ பேச வெளிக்கிடுவது நடைமுறை அரசியல் யதார்த்தத்திற்கு மிகவும் அந்நியமானவை. 
முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிபந்தனையுடனான இணைப்பை ஏற்ப தோ நிபந்தனையற்ற இணைப்பை ஏற்பதோ இரண்டும் பெரும் அரசியல் துரோகமாகவே எதிர்காலத்தில் பார்க் கப்படும். இது குறித்து முடிவு செய்யும் தார்மீக அருகதை முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்பதை      சிவில் சமூகம் உணர்ந்து செயல்பட வேண்டும். 
ஆக, வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தான் வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லிம்  சிவில் சமூகத்தின் தெளிவான நிலைப் பாடாகும். கருத்துக் கணிப்புகளும், பிரதேச ரீதியான கலந்துரையாடல்களும் இதனை உறுதி செய்துள்ளது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network