கட்டாரில் தொழில் புரியும் உறவுகளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் எம்.பி

ஜனாதிபதி குழுவுடனான இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு கட்டார் சென்றடைந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் அங்கு தொழில் புரியும் இலங்கை நாட்டு உறவுகளை நேற்று இரவு கட்டார் நேரப்படி 9.00 மணியளவில் ஹோட்டல் றேக்கா வில் வைத்து சந்தித்தார் இச் சந்திப்பில் கட்டாரில் தொழில் புரியும் இலங்கை நாட்டவர்கள் அதிகமானோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சிறப்புறை ஒன்றையும் நிகழ்த்தி இருந்தார் இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிப்புர் றஹ்மான் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.