மஸ்தான் எம்.பியின் அழைப்பின் பேரில் வவுனியா வருகிறார் ஜனாதிபதி மைத்திரிநாளை வவுனியாவில் ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை "நிலமெஹவர"  ஏற்பாட்டு வேலைகள் 90% பூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் K.காதர்ம ஸ்தான் நாளை 21-10-2017 வவுனியாவில் நடைபெறவிருக்கும் “நிலமெஹவர” ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவையை முன்னிட்டும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வருகையை வரவேற்குமுகமாகவும் வ/ சைவபிரகாசா மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவரும் ஏற்பாட்டு வேலைகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு  ஏற்பாட்டு வேலைகளைப் பார்வையிட்டார். அத்துடன் கலாசாலை அதிபர் அவர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் மேலதிக ஆலோசனையை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.