இந்திய முஸ்லிம்களின் மத சுதந்திரத்தை பறிக்க துடிக்கும் மோடி அரசுஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை திட்டுமிட்டு செயல்படுத்தி வருகிறது.

பொதுசிவில் சட்டத்தை கையிலெடுத்து தோற்றுப்போன காவி அரசு, இஸ்லாமிய மன்னர்களின் வரலாறுகளை அழிக்கும் வண்ணம் மன்னர்களின் பெயரில் உள்ள இடங்களை எல்லாம் பெயர்மாற்றம் செய்து வருகிறது.

தாஜ்மகாலை சுற்றுலாத்தளங்களின் பட்டியலில் இருந்து விலக்கி உலக அளவில் கேவலத்தையும், கண்டனத்தையும் பெற்ற மோடி அரசு தற்போது கையிலெடுத்திருப்பது ஹஜ் மானியம் ரத்து!

ஹஜ் மானியத்தால் உண்மையில் பலனடைவது இஸ்லாமியர்கள் அல்ல! மத்திய அரசும் ஏர் இந்தியாவும் தான்.

ஹஜ் பயனிகளின் விமான போக்குவரத்தை குறைத்து கடல்வழி பயணங்களை மேற்கொள்ள சொல்லும் காவி அரசின் மதவிரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
#Digital_india என பெருமை பீத்திக்கொள்ளும் மோடி அரசின் கேலிக்கூத்தை பார்த்து உலக நாடுகள் காரி உமிழ்கின்றன.