Oct 23, 2017

உள்­ளூ­ராட்சி தேர்தல்: கிழக்கில் ஐ.தே.க. தனித்துப் போட்டி; இம்ரான் பேட்டி


எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி  கிழக்கு மாகா­ணத்தில்  தனித்து போட்­டி­யி­டு­வ­தற்­கான இறு­தி­கட்ட பேச்­சு­வார்த்­தைகள் தலை­மைத்­து­வத்­துடன் இடம்­பெற்­று­வ­ரு­கி­றது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.
திரு­கோ­ண­மலை கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். 
அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர், 
1989 வரை கிழக்கு மாகா­ணத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியே கிழக்கில் தனிப்­பெரும் கட்­சி­யாக ஆட்சி அமைத்­தது. ஆனால் அன்று முஸ்லிம் காங்­கி­ர­சுடன் எமது கட்சி செய்து கொண்ட ஒப்­பந்­தமே கிழக்கில் குறிப்­பாக அம்­பா­றையில் எமது கட்­சியின் வீழ்ச்­சிக்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­தது. அதன்­பின்னர் நாம் பெரும்­பாலும் எதிர்­க்கட்­சி­யாக காணப்­பட்­ட­மையால் இந்த சரி­வி­லி­ருந்து எமது கட்­சியை மீட்­டெ­டுப்­பதில் நாம் தோல்வி கண்­டி­ருந்தோம். 
ஆனாலும் நல்­லாட்சி ஏற்­பட்­டதில் இருந்து கட்­சியை கிழக்கில் மீளக்கட்­டி­யெ­ழுப்ப பல செயற்றிட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கிறோம். இதன்­ப­ய­னாக பலர் இன்று கிழக்கில் தமது தாய் கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன்  இணைந்­துள்­ளனர்.
இவ்­வா­றான சந்­தர்ப்­பத்­தி­லேயே நாம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­கொள்­ள­வுள்ளோம். 
திரு­கோ­ண­ம­லையை பொறுத்­த­வரை நாம் தனித்து போட்­டி­யிட்டே முஸ்லிம் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வசிக்கும் அனைத்து சபை­க­ளையும் தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக உள்ள சபை­களில் அதிக உறுப்­பி­னர்­க­ளையும்  கைப்­பற்­றலாம். அத்­தோடு அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சபை­களில் பெரும்­பான்­மை­யான அங்­கத்­த­வர்­களை பெறலாம். 
ஆகவே, கிழக்கு மாகா­ணத்தில் தனித்துப் போட்­டி­யி­டு­வதே எமது கட்­சியின் எதிர்­கால வளர்ச்­சிக்கு வழி அமைக்கும். இருந்­தாலும் வழமை போன்று யானையின் முதுகில் சவாரி செய்ய அர­சாங்­கத்தின் பங்­காளி கட்­சிகள் திட்­ட­மிட்டு வரு­கின்­றன. 
இக் கட்­சிகள் திட்­ட­மி­டு­வது போன்று  எமது கட்சி இவர்­க­ளுடன் கூட்­டணி அமைத்தால் 1989 இல் அம்­பா­றையில் எமது கட்­சிக்கு ஏற்­பட்ட நிலையே எதிர்­கா­லத்தில் கிழக்கு மாகாணம் முழு­வதும் ஏற்­படும். இதை தடுத்து கிழக்கில் மீண்டும் தனிப்­பெரும் கட்­சி­யாக ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியை மாற்­றி­ய­மைக்க நாம் தனித்து போட்­டி­யி­டு­வதே சிறந்­தது.
இது தொடர்­பாக எமது தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, பொதுச்­செ­ய­லாளர் கபீர் ஹாசிம் மற்றும்  கட்சி செயற்­கு­ழு­வுடன்  தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். கிழக்கில் முஸ்லிம் கட்­சி­க­ளுடன் கூட்­டணி அமைப்­பதால் எமது கட்­சிக்கு ஏற்­படும் பாதிப்­புக்கள் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்து வரு­கிறோம். விரைவில் இது தொடர்­பாக தீர்கமான முடிவொன்று கட்சியால் எடுக்கப்படும். 
நான் இவ்விடத்தில் முஸ்லிம் கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால் யானையின் முதுகில் சவாரி செய்யாமல் தனித்து போட்டியிட்டு திருகோணமலையில் ஒரு சபாயையாவது கைப்பற்றி காட்டுங்கள் என தெரிவித்தார். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network